பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாட்டும் தொகையும்

ஒருகை பள்ளி யொற்றி ஒருகை முடியொடு கடகம் சேர்த்தி நெடிதுநினைந்து பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல் நகைதாழ் கண்ணி கல்வலங் திருத்தி அரசிருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை இன்துயில் வதியுநற் காணாள் துயருழந்து நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு

-முல்லைப் பாட்டு : 67 - 81

தலைவியின் துன்ப நிலையோ சொல்லுந் தரத்ததன்று, தலைவன் பிரிவால் அவள் உடல் இளைத்துவிட்டது. கை களில் அணிந்திருந்த வளையல்கள் கழன்றுவிட்டன. மழை சோவெனப் பெய்துகொண்டிருக்கிறது. அவள் பக்கத்தில் யவனர்கள் தந்த பாவை விளக்கு அமைதியாக எரிந்து கொண்டிருக்கிறது. தலைவன் வினைமுடித்து விரைவில் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு இருக்கும் போது தலைவனின் தேரிற் பூட்டப்ட்ட குதிரைகளின் குளம்படி ஓசை தலைவியின் செவிகளில் விழுகின்றன. இந்த அளவில் முல்லைப்பாட்டு முடிகின்றது.

முல்லைப்பாட்டின் ஆசிரியர் மதுரைப் பொன் வாணி கனார் மகனார் நப்பூதனார் ஆவார். பாட்டின் தொடக் கத்திலேயே கடலிலிருந்து புறப்பட்டு நீரை முகந்து சென்று மலையிலே தங்கி வானத்தில் தோன்றி மழைபெய்யும் மேகத்தைத் திருமாலின் நிறத்திற்கு ஒப்பிடுகின்றார். மாபலிச்சக்ரவர்த்தி வாமனனாக வந்த திருமாலின் கையில் அர்க்கிய நீரை வார்த்த அளவில் உயர்ந்து வளர்ந்த திரு மாலைப் போன்ற மேகம் எனறு மேலும் ஒப்புமையை விரிக்கின்றார்.

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்