பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மதுரைக் காஞ்சி

பத்துப் பாட்டில் ஆறாவதாக அமைந்திருக்கும் இப் பாட்டு தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடுபேறு பெறும் நிமித்தம் பல்வகை நிலையாமையை அறிவுறுத்துதற்கு மாங்குடி மருதனார் எனும் சங்கச் சான்றோர் பாடியதாகும். இப் பாட்டு 782 அடிகளை உடையது. பெரும்பாலும் ஆசிரியப்பாவிலும், முதலிலும் இடையே சிலசிலவிடத்தும் வஞ்சிப்பா அடி களும் வந்த சிறப்பை உடையது. மதுரைக் காஞ்சி’ என்ற தொடருக்கு மதுரை மாநகரிடத்து அரசுக்குரிய காஞ்சி எனப் பொருள் விரிப்பர். ‘காஞ்சி’ என்ற சொல்லுக்கு நிலையாமை என்று பொருள். எனவே, காஞ்சித் திணை என்பது வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமை யினைச் சான்றோர் கூறும் சிறப்பினதாகும்.

இப் பாட்டின்கண்

கொன்ஒன்று கிளக்குவல், அடுபோர் அண்ணல்! கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்!’

-மதுரைக் காஞ்சி : 207-208

எனும் தொடரில் வீடு பேறாகிய நிமித்தம் குறிப்பிடப் பட்டுள்ளது என்றும்,