பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பாட்டும் தொகையும்

மழுவாள் நெடியோன் தலைவன் ஆக, மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ்சுடர் வாடாப் பூவின், இமையா நாட்டத்து நாற்ற உணவின், உருகெழு பெரியோர்க்கு”

-மதுரைக் காஞ்சி : 455-458 என்று குறிப்பிடுவதால் அறியலாம். மேலும் இவர்,

தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின் தொல் முது கடவுட் பின்னர் மேய

-மதுரைக் காஞ்சி : 40-41

என இவர் இயற்றியுள்ள அடிக்கு நாச்சினார்க்கினியர் உரை எழுதும்பொழுது, கூற்றுவனை யுதைத்த கடவு ளென்று இறைவனாக்கி’ என்று குறிப்பிட்டிருப்பதனால் இக்கருத்து மேலும் விளக்கமுறுகின்றது. மாங்குடி மருத னார் பாடியனவாக மதுரைக்காஞ்சி ஒன்றும் நற்றிணை யில் இரண்டு பாடல்களும் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் அ. க நா னு ற் றி ல் ஒரு பாடலும் புறநானூற்றில் =}}, Ql பாடல்களும் திருவள்ளுவ மாலையில் ஒரு பாடலும் காணப்படுகின்றன. இனி இவர் பாடியுள்ள மதுரைக் காஞ்சியின் மாண்பினைப் படிப் படியே காண்போம்.

இந்நூலின் முதலில் நெடுஞ்செழியன் மரபுச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அடுத்து அவன்தன் முன் னோரின் சிறப்பு முப்பது அடிகளால் முறையே துவலப்பட் டிருக்கின்றது. இதனையும் அடுத்து, மன்னனின் போர்த் திறம் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இன் இசைய முரசம் முழங்க, பொன்மலிந்த விழுப்பண்டம் நாடுஆர நன்கு இழிதரும், ஆடு இயற் பெரு நாவாய்,