பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாட்டும் தொகையும்

‘தென் பரதவர் போர் ஏறே!’

என்ற அடி நினைத்தற்குரியது. செழியனுடைய கருணை யுள்ளம் முப்பது அடிகளில் 126 - 151 உணர்த்தப்பட்டுள் ளது. மேலும் அவனுடைய வெற்றிச் சிறப்பால் பகைவர் நாடுகள் பாழ்பட்ட நிலையினைப் பாடல் அடிகள் 152 முதல் 181 வரை விளக்கமாக விளம்பியுள்ளார். மருதவளக் காட்சிகள் மாண்புற விளக்கப்பட்டுள்ளன. நிலையாமைக் கருத்து,

‘பணிந்தோர் தேஎம் தம்வழி நடப்ப,

பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார் பருந்துபறக் கல் லாப் பார்வற் பாசறைப் படுகண் முரசம் காலை இயம்ப வெடிபடக் கடந்து, வேண்டு புலத்து இறுத்த பணைகெழு பெருங் திறல், பல்வேல் மன்னர் கரைபொருது இரங்கும், கனை இரு முந்நீர்த் திரைஇடு மணலினும் பலரே, உரை செல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே!’

-மதுரைக் காஞ்சி : 229 - 237

என்ற அடிகளில் இடம்பெற்றுள்ளது. மருத வளத்தோடு முல்லை வளமும் குறிஞ்சி வளமும் பாலை நிலையும், நெய்தல் வளமும் சிறப்பாக இந் நூலில் புலப்படுத்தப்பட் டுள்ளன. அடுத்து, மதுரை மாநகர அமைப்பு, அந்நகரில் ஏற்றப்பட்டு உள்ள பல்வகைக் கொடிகள், நால்வகைப் படைகள், நாளங்காடி, விழாக் காட்சிகள், செல்வர் செயல் கள், முன்னிரவு நிகழ்ச்சிகள், இரண்டாம், மூன்றாம் சாம நிகழ்ச்சிகள், விடியல் நிகழ்ச்சிகள் முதலியன மிகச் சிறப் பாக இந்நூலுள் வருணிக்கப்பட்டுள்ளன.

“யாறு கிடந்தன்ன அகன் நெடுங் தெருவில்’

-மதுரைக் காஞ்சி : 359

மன மதுரை மாநகர வீதியின் அழகு விளம்பப்பட்டுள்ளது .