பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுநல்வாடை 43

நெடுநல்வாடையிற் குறிக்கப் பெறும் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பர்.

நக்கீரரின் வருணனைத் திறம் இப்பாட்டு முழுவதும் புலப்படுகின்றது. பாட்டின் தொடக்கமே ஒரு சொல்லோ வியமாக அமைந்திருக்கக் காணலாம். பாட்டின் தொடக் கமே நெஞ்சைப் பிணிக்கும் வகையிலே அமைந்துள்ளது. சிறிய கொடியினையுடைய முசுண்டைக் கொடியின் வெண்மையான பூக்கள், பொன்னிறத்ததான பீர்க்கம் பூக் களுடன் ஒவ்வொரு புதரிலும் விரிந்து மலர்ந்திருக்கின்றன. பசியகால்களையும் மெல்லிய சிறகுகளையும் உடைய கொக்குக் கூட்டமும் நாரைகளும் மழை சிறிது விட்ட அளவிலே வெளிப்பட்டுக் கயல்மீன்களைப் பிடித்துத் தின் கின்றன. தெருக்களிலே மனித நடமாட்டமே இல்லை. முறுக்கேறிய உடல் வலிமைபெற்ற சிலர்மட்டும் கள் அருந்திவிட்டு, வீசும் துாற்றலையும் பொருட்படுத்தாமல் இங்கும் அங்குமாகத் திரிந்துகொண் டிருக்கிறார்கள். வண்டுகள் மொய்த்துக் கிடக்கும் கள்ளைக் குடித்துவிட்டுக் களிகொண்டிருக்கிறார்கள் அவர்கள். குளிரினால் உடலை முடிக்கொள்ள வேண்டியிருக்க, தங்கள் உடல்மேற் சூழ்ந் துள்ள ஆடைகளை முன்னும் பின்னுமாகத் தொங்கவிட் புருக்கிறார்கள். பகலா இரவா என்று அறியமுடியாத அம் மழைக்காலத்தில் பிச்சி அரும்புகள் மலர்ந்து மணம் பரப்பு தலால் அஃது அந்திக்காலம்தான் எனத் தெளிந்து, மகளிர் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வைத்து, நெல்லையும் மல . யும் து வி, இல்லுறை தெய்வத்தை வணங்குகிறார்கள். அன்விடுகளிலே உள்ள புறாக்கள், வெளியே பறந்துசென்று வைத் தேட முடியாமல் ஒரே இடத்தில் இருந்து கொண்டு காலை மாற்றி மாற்றி வைத்துப் பொழுதைப் ோர் ,ன்ெறன. எடுப்பாரின்றிக்கிடக்கும் சந்தனக்கல்லும் வெந்திவலைப் பின்னிக் கிடக்கும் விசிறியும், குடிப்பாரின் மையால் பயனற்றுக்கிடக்கும் குவிந்த வாயையுடைய மட்