பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பாட்டும் தொகையும்

அசோகமர நிழலில் இருந்த நிலையும், தலைவனது வருகையும், தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதலும், தலைவன் ஆங்கிருந்த மகளிரிடம் கெடுதி வினாவுதலும், தலைவன் தலைவியின் சொல்லை எதிர்பார்த்து நிற்றலும், அது போது யானை அடங்காச் சினத்துடன் தினைப்புனத்திற்கு வர அதுகண்டு மகளிர் நடுங்கிய செயலும், யானையினைத் தலைவன் அம்பு எய்து துரத்தியதும், தலைவியை நீரி லிருந்து காப்பாற்றித் தலைவன் அருளுடையோனான நிலையும், தலைவி தலைவனுடன் கூடி இன் புற்ற நிலையும், இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகையும், மாலைக் காலத்தின் வருகையும், அதுகண்டு தலைவன் திரும்பிச் சென்ற நிலையும், தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்கியதும், இரவில் தலைலன் வரும் வழியின் அருமையினை நினைத்தலுமாகிய பல்வேறு களவுக் காலத்துச் செயல்கள் குறிஞ்சிப்பாட்டில் நயம்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

அன்னாய் வாழிவேண் டன்னை யொண்ணுதல் ஒலிமென் கூந்தலென் றோழி மேனி விறலிழை நெகிழ்த்த விவருங் கடுநோய் அகலு ளாங்கண் அறியுங்ர் வினாயும் பரவியுங் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் லுருவிற் கடவுட் பேணி கறையும் விரையு மோச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும் புட்பிறர் அறியவும் புலம்புவந்து அலைப்பவும் உட்கரங் துறையும் உய்யா வரும்படர் செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்

-குறிஞ்சிப் பாட்டு: 1-12