பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பாட்டும் தொகையும்

பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா விரிமலர் ஆவிரை வேரல் சூரல் குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி குருகிலை மருதம் விரிபூங் கோங்கம் போங்கம் திலகம் தேங்கழ் பாதிரி செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம் கரந்தை குளவி கடிகமழ் கலிமாத் தில்லை பாலை கல்லிவர் முல்லை குல்லை பிடவஞ் சிறுமா ரோடம் வாழை வள்ளி நீணறு நெய்தல் தாழை தளவம் முட்டாள் தாமரை ஞாழல் மெளவல் நறுந்தண் கொகுடி சேடல் செம்மல் சிறுசெங் குரலி கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை காஞ்சி மணிக்குலைக் கள்கமழ் நெய்தல் பாங்கர் மராஅம் பல்பூங் தணக்கம் ஈங்கை இலவம் தூங்கிணர்க் கொன்றை அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி வஞ்சி பித்திகம் சிங்து வாரம் தும்பை துழாஅய் சுடர்ப்பூங் தோன்றி நந்தி நறவம் கறும்புன் னாகம் பாரம் பீரம் பைங்குருக் கத்தி ஆரங் காழ்வை கடியிரும் புன்னை கரந்தம் நாகம் நள்ளிருள் நாறி மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவும் அரக்கு விரித்தன்ன பரேரம் புழகுடன் மால் அங்குடைய மலிவனம் மறுகி வான்கண் கழி இய அகலறைக் குவைஇ.

-குறிஞ்சிப் பாட் டு; 66-98

இந்த 99 வகைப் பூக்களில் இன்று ஏறத்தாழ 35 வகைப் பூக்களுக்குமேல் நாம் காணக்கூடவில்லை. தமிழர்