பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( 54

பாட்டும் தொகையும்

நின்னோடு உண்டலும் புரைவது என்றாங்கு அறம்புணை ஆகத் தேற்றி, பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி அம்தீம் தெள் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து, அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி வான்உரி உறையுள் வயங்கியோர் அவாவும் பூமலி சோலை அப்பகல் கழிப்பி

-குறிஞ்சிப் பாட்டு : 201 - 214

கபிலர் பெருமான் மாலைக் காலத்தின் வருகையை மனங் கொளத்தக்கவகையில் வருணித்திருக்கும் பாங்கு பின்வரும் அடிகளால் இனிதே புலப்படுத்தப்பெறும்:

எல்லை செல்ல ஏழ்ஊர்பு இறைஞ்சிப் பல்கதிர் மண்டிலம் கல்சேர்பு மறைய மான் கணம் மரமுதற் தெவிட்ட ஆன் கணம் கன்றுபயிர் குரல மன்று நிறை புகுதர ஏங்குவயின் இசைய கொடுவாய் அன்றில் ஓங்கிரும் பெண்ணை அகமடல் அகவப் பாம்பு மணி உமிழப் பல்வயின் கோவலர் ஆம்பல் அம் தீம்குழல் தெள்விளி பயிற்ற ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட வளமனைப் பூந்தொடி மகளிர் சுடர்தலைக் கொளுவி அந்தி அந்தணர் அயர. கானவர் விண்தோய் பணவைமிசை ஞெகிழி பொத்த வானம் மாமலை வாய்சூழ்பு கறுப்பக் கானம் கல்லென்று இரட்டப் புள்ளினம் ஒலிப்ப, சினை இய வேந்தன் செல்சமம் கடுப்பத் துனை இய மாலை துன்னுதல் காணுஉ

-குறிஞ்சிப் பாட்டு : 216 - 230

தலைவன் தலைவியின் முன்கையைப் பற்றி, “நாம் மேற் கொண்ட களவுமணம் இவ்வாறு கழிய, விரைவில் நாட்டு