பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பாட்டும் தொகையும்

தலைவன் வரும் வழியின் அருமை குறிஞ்சிப்பாட்டின் இறுதிப் பத்து அடிகளில் பாங்குறப் புலப்படுத்தப்பட்டுள்ள நிலையினைக் காணலாம்.

....................கங்குல் அளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும் புழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் வலியின் தப்பும் வன்கண் வெஞ்சினத்து உருமும் சூரும் இரைதேர் அரவமும் ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ்சுழி வழங்கும் கொடுங்தாள் முதலையும் இடங்கரும் கராமும் நூழிலும் இழுக்கும் ஊழ்-அடி முட்டமும் பழுவும் பாங்தளும் உளப்படப் பிறவும் வழுவின் வழாஅ விழுமம் அவர் குழுமலை விடரகம் உடையவால் எனவே

-குறிஞ்சிப் பாட்டு : 251 - 261

இப் பாட்டு குறிஞ்சிப்பாட்டு ஆதலின் குறிஞ்சிக்குரிய கடவுளாகிய முருகப் பெருமானைப் பற்றிய செய்திகள்,

சுடர்ப்பூட் சேஎய் ஒன்னார்க் கேந்திய விலங்கிலை எஃகின் மின்

என்றும்,

நெடுவே ளணங்குறு மகளிர்

என்றும்,

பிறங்குமலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் கபிலர் ஆவர். இவர்

பிறந்த ஊர் பாண்டிநாட்டிலுள்ள திருவாதவூர் என்பர். இவர் அந்தணர் என்பதனை,