பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 57

யானே, பரிசிலன் மன்னு மந்தணன்

-புறம் : 200 யானே தந்தை தோழன் இவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே

-புறம் : 201

புலனழுக் கற்ற வந்த ணாளன்

-புறம் : 126 எனும் புறப்பாடற் பகுதியால் அறியலாம். இவர் பாரிவள்ளலின் நெருங்கிய நண்பர் என்பதனைப் புற நானுாற்றுப் பாடல்கள் பலவற்றால் மிகச் சிறப்பாக அறியலாம். இவரை,

உலகுடன் றிரிதரும் பலர்புகழ் கல்லிசை வாய்மொழிக் கபிலன்.

-அகம் 78

என்று நக்கீரரும்,

உவலைக்கூராக் கவலையி னெஞ்சின் கனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்

என்று பெருங்குன்றுார்கிழாரும்,

செறுத்த செய்யுட் செய்செங் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்

-புறம் : 53

என்று பொருந்திலிளங்கீரனாரும், ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ என்றும், ‘பொய்யா நாவிற் கபிலன்’ என்றும், பாடியுள்ள திறம் கண்டு கபிலரின் பெருமை கவினுற விளங்குகின்றது. குறிஞ்சி பாடக் கபிலன்’ எனும் தொடர்கொண்டு குறிஞ்சித் திணையைப் பாடுவதில்