பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாட்டும் தொகையும்

இவருக்கு நிகர் இவரே என்பதனையும் அறியலாம். இச் சிறப்புமொழிக்குச் சான்றாகத் திகழ்வதுதான் இத் தொடராகும்.

சுருங்கச் சொன்னால், சங்கப் பாடல்களில் தலைமைப் பாடல்களாகக் கருதத்தக்க கருத்துச் செறிவும் இலக்கிய நயமும் மிகுந்து காணப்படுவன கபிலரின் பாடல்களே என்று உறுதியாகக் கூறலாம். மேலும், தமிழ்ப் பண் பாட்டை அறிய ஆரிய அரசனுக்கு அறிவுறுத்த, கபிலர் பாடிய பாட்டு என்ற தனிப்பெருமையினைத் தாங்கி நிற்பது குறிஞ்சிப் பாட்டு’ என்பது வெள்ளிடை மலை.