பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



9. பட்டினப்பாலை

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா!

என்று மகாகவி பாரதியார் பாடினார். இயற்கை அழகெல் லாம் கொள்ளை இன்பம் குவிப்பனவாகும். இறைவனால் படைக்கப்பட்ட இயற்கைக் காட்சிகள் மட்டுமல்லாமல், மனிதனால் உருவாக்கப்படும் சில காட்சிகளும் மாட்சி பெற அமைந்து விடுகின்றன. கற்பனைக்கியைந்த காட்சி களை மாட்சிபெற விளக்கி நிற்கும் பாட்டுகளில் தலை யானது பட்டினப்பாலையாகும். கடியலுர் உருத்திரங் கண்ணனார் என்னும் சங்ககாலப் புலவரின் காட்சி யோவியங்கள் மாட்சியுடன் தீட்டப் பெற்றிருக்கும் பாங்கினைப் பட்டினப்பாலை பறைசாற்றி நிற்கிறது.

பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன் ஆவான், இவனைப் பாடியவர் கடியலுர் உருத் திரங்கண்ணனார் ஆவர். இப்பாட்டு அகப்பொருள் அமைதி கொண்டு, 301 அடிகளால் ஆகியது, பட்டினம் என்ற சொல் எல்லாக் கடற்கரை நகரங்களுக்கும் பொதுப்பட வழங்கினாலும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அச் சொல் காவிரிப்பூம்பட்டினத்தையே குறித்தது. பாலை என்பது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கொண்ட அகப் பொருள் திணையாகும். பட்டினத்தைச் சிறப்பித்துக்கூறும்

பாலைத்திணைப்பாட்டு, பட்டினப்பாலை ஆயிற்று. மதுரைக்காஞ்சி மதுரையின் மாட்சியினைப் புலப்படுத்தி நிற்பது போன்று, பாட்டினப்பாலை காவிரிப்பூம்

பட்டினத்தின் பெருமையைப் பரக்கப் பேசுகின்றது.