பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 பாட்டும் தொகையும்

வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல்பரங்து பொன்கொழிக்கும் விளைவறா வியன்கழனி

-பட்டினப்பாலை : 1 - 8

சோழநாட்டு வயல்களில் கரும்புகள் நெடிதோங்கி வளர்ந்துள்ளன. அவ்வயலோரங்களில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் கொட்டில்கள் பல இருக்கின்றன. அங்கிருந்து எழும் புகை, பக்கத்து வயல்களில் மலர்ந்துள்ள நெய்தற் பூக்களை வாடச் செய்கின்றன. மருத வயல்களில் வளர்ந்துள்ள நெற்கதிர்களையுண்ட எருமைக் கன்றுகள் நெற்கூடுகளின் நிழலிலே உறங்கிக் கொண்டிருக்கின்றன. நெருங்கிய குலைகளையுடைய தென்னை, வாழை, பனை முதலிய மரங்களும், மஞ்சள், சேம்பு, இஞ்சி முதலிய செடிகளும் அடர்ந்து செழித்து வளர்ந்திருக்கின்றன. பாக்கங்களில் செல்வர்கள் வாழுகின்றனர். அவர்கள் வீதிகள் அகன்றவை.

விளைவறா வியன்கழனிக் கார்க்கரும்பின் கமழ்ஆலைத் தீத்தெறுவிற் கவின்வாடி நீர்ச்செறுவின் நீள்நெய்தற் பூச்சாம்பும் புலத்தாங்கண் காய்ச்செந்நெற் கதிர்அருங்தும் மோட்டெருமை முழுக்குழவி கூட்டுநிழல் துயில் வதியும் கோள்தெங்கின் குலைவாழைக் காய்க்கமுகின் கமழ்மஞ்சள் இனமாவின் இணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளை இஞ்சி அகனகர் வியன்முற்றத்து

-பட்டினப்பாலை : 8 - 20