பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினப்பாலை G5

பொதிமூடைப் போர்ஏறி மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் கூர்உகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில்

-பட்டினப்பாலை : 126 - 141

பிற நாடுகளிலிருந்து கடல்வழியாய் வந்த குதிரை களும், நிலத்தின் வழியே வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரப்பட்ட மிளகு மூட்டைகளும், இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட மாணிக்கக் கற்களும், குடகு மலை யிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்தனமும் அகிற் கட்டை களும், தென்கடலில் பிறந்த முத்துக்களும், கீழ்த்திசைக் கடலிற் பிறந்த பல வளங்களும், கங்கையாறு பாயும் பகுதிகளில் விளைந்த பொருள்களும், ஈழத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் அத்தெருக்களில் குவிந்துள்ளன,

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய கனந்தலை மறுகு

-பட்டினப்பாலை : 185 - 197

இவையல்லாமல் பிற இடங்களில் கிடைக்காத பொருள்களும் நிலமங்கையின் முதுகுநெளியும் வண்ணம் அங்கே வந்து குவிந்து கிடக்கின்றன. இவ்வருமையான பொருள்களை விற்கும் வணிகர்கள் தங்கள் நேர்மையி

шт.—5