பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாட்டும் தொகையும்

லிருந்து சிறிதும் வழுவதில்லை. அவர்கள் நடுவுநிலைமை .

போற்றிப் பழிக்கு அஞ்சி, எப்போதும் உண்மையே பேசும் இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். தங் களுடைய பொருள்களையும் பிறருடையபொருள்களையும் ஒரு தன்மையாகவே நினைக்கின்றார்கள். பிறரிடமிருந்து பொருள்களை விலைக்கு வாங்கும்போது மிகுதியாகக் கொள்ளாமலும், பிறருக்கு விற்கும் போது குறைவாகக் கொடுக்காமலும் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார்கள். தாங்கள் விற்கும் ஒவ்வொரு பொருளின் நியாமான விலையினைக் கூறியே அவர்கள் வாணிகம் செய்கிறார்கள்.

நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதுஉ மிகை கொளாது கொடுப்பது உங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை

-பட்டினப்பாலை : 206 - 212

காவிரிப் பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதியிலே வாழும் பரதவர்கள் ஒய்வு நாட்களில் எப்படித் தம் பொழுதைப் போக்கி மகிழ்கின்றார்கள் என்னும் காட்சி யினை மாட்சிபடக் கடியலுர் உருத்திரங்கண்ணனார் கவினுறக் கட்டுரைத்துள்ளார்.

நிறைநிலா - பெளர்ணமி நாளிலே அலைகளின் ஆர்ப் பரிப்பு மிகுதியாக இருக்கும். எனவே பரதவர் அன்று மீன் பிடிக்கப் போக மாட்டார்கள். சினை கொண்ட சுறாமீன் கொம்பை நட்டு, அதிலே ஆடல் தெய்வம் வாழ்வதாகக் கருதுவார்கள். அதற்குத் தாழை மலரைச்சூட்டி மகிழ்வர். பனங்கள்ளைக் குடித்துக் களிகொள்ளும் தமது பெண்டி ருடன் விரும்பிய பலவற்றை உண்டு மகிழ்வர்.