பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாட்டும் தொகையும்

திலிருந்து மலையேறிச் சென்று மலையில் பாய்ந்தோடும் சேயாற்றைக் கடந்து அதன் கரை வழியே நடந்து தரையில் அமைந்திருந்த செங்கண்மா என்னும் நன்னனது நகரத்தை அடையும் வரையில் மலையடிவார ஊர்கள், மலைமே லிருந்த ஊர்கள், காடுகள், ஊர் மக்கள் இயல்புகள், அவர்கள் விருந்தினரை உபசரிக்கும் முறை, ஆங்காங்குக் கிடைக்கும் உணவு வகை, மலைமீது கோயில் கொண் டிருக்கும் காரியுண்டிக் கடவுள் பற்றிய விவரம், நன்னனது கொடைப் பண்பு முதலிய பல செய்திகள் மலைபடு கடாத்தில் கூறப்பட்டுள்ளன.

உயர்நிலை மாக்கல் புகர் முகம் புதைய மாரியின் இகுதரு வில்லுமிழ் கடுங்கணைத் தாரொடு பொலிந்த வினைகவில் யானைச் சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ இலஞ்சி ஒரியாற்று இயவின் மூத்த புரிசைப்

பராவரு மரபிற் கடவுள்!

-மலைபடுகடாம் : 225-230

எனக் காரியுண்டிக் கடவுள் நிலையைச் சுட்டுகிறார்.

வரகின் கவைக்கதிருக்கு வாதியின் கையை உவமை காட்டியிருத்தலும், குறப்பெண்டிர்தம் கணவர் புண்ணாற் படும் வருத்தத்தைப் பாட்டுப்பாடித் தணித்தலும், யானை யைக் கந்திற் பிணிக்கும் பாகர் யானை பயிற்றும் சில வட மொழிகளைப் பயன்படுத்தும் வழக்கமும், வழிக்கு அடை யாளமாகக் கவர்த்த வழிகளின் தொடக்கத்தில் புல்லை முடிந்து வைத்தலும், கற்புக்குக் கொடியுண்மையும், பாணருக்குப் பொற்றாமரைப் பூவையும் விறலியர்க்கு இழைகளையும் வள்ளற்றன்மை வாய்ந்தோர் வாரி வழங்கலும் ஆகிய இன்னபிற செய்திகள் இந் நூலால் விளக்கம் பெறுகின்றன.

இன்ன இன்ன செய்திகளைக் கூறுவேன் நீ கேள் என்று கூறிச் செய்திகளைத் தொகுத்துச் சுட்டிப் பின்பு விரிக்கும் முறை இவ்வாற்றுப் படையில் மட்டும் காணப்படுகிறது.