பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைபடுகடாம் 7 I

தொலையா கல்லிசை உலகமொடு நிற்பப் பலர்புறங் கண்டவர் அருங்கலங் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும்.அவன் ஈகைமாரியும் இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுகர்க்கு அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு துரத்துளி பொழிந்த பொய்யா வானின் வியாது சுரக்கும்.அவன் நாண்மகிழ் இருக்கையும் கல்லோர் குழீஇய நாகவில் அவையத்து வல்லா ராயினும் புறமறைத் துச் சென்றோரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி கல்லிதின் இயக்கும்.அவன் சுற்றத்து ஒழுக்கமும்

-மலைபடுகடாம் : 70 - 80

என வருதல் காண்க.

இப்புலவர் கூத்தனை ஆற்றுப்படுத்துகையில் இன்ன இன்ன செயல்களைச் செய்க எனக் குறிப்பிடுகையில் அவ்வத்திணைக்கேற்ற பண்களைப் பாடுமாறு சொல்வி யுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது. குறிஞ்சி மருதப் பண்களை யாழில் இசைக்கும் திறனைக் குறிப்பிட்டிருக்கும் பெருங்கெளசிகனார் இசைநுட்பம் அறிந்த புலவர் என்பது பெறப்படும்.