பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம் பெற்றிருக்கிற தொகை நூல் நற்றிணையாகும். எட்டுத் தொகை நூல்களாவன இவை எனத் தெரிவிக்கும் பழைய பாடல் ஒன்று உள்ளது. அது வருமாறு :

கற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று இத்திறத்த எட்டுத்தொகை.

நல்+திணை=நற்றிணை ஆகும். திணை என்பது ஒழுக்கம். நல்ல ஒழுக்கத்தினை நாடி உரைக்கும் நல்ல நற்றிணையாகிறது. எட்டுத்தொகை நூல்களுள் திணை என்ற பெயரால் வழங்கும் நூல் இது ஒன்றேயாகும். இஃது ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டிப் பேரெல்லையும் கொண்ட நானுாறு அகவற்பாக்களால் ஆன நூலாகும். இத்நூல் நற்றிணை நானுாறு’ என்றும் வழங்கும். இரு நூற்றெழுபத்தைந்து புலவர் பெருமக்கள் நற்றினைப் பாடல்களை இயற்றியுள்ளனர். இந்நூற்குப் பின்னத்துார் அ. நாராயணசாமி ஐயரவர்களின் உரையொன்றுள்ளது.

இந்நூற்கு அமைந்துள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் திருமாலைப் பற்றியதாகும். பாடியவர் பாரதம். பாடிய