பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7& பாட்டும் தொகையும்

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணி இயர் வெண்கோட் டியானைப் போஒர்கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்னங்ண் பிழையா நன்மொழி தேறிய இவட்கே

-நற்றிணை : 10

நெய்தல் திணையினை நேர்த்தியுறப் பாடுதலில் வல்லவர்கள் அம்மூவரும். உலோச்சனாரும் ஆவர். உலோச்சனார் நெய்தல் திணை அமையப் பாடிய பாட் டொன்று நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

‘தோழி! வாழ்வாயாக! நம்மூர்த் தெருவிலுள்ள மாதர்களும் ஒரோ ஒரிடத்தில் சிற்சிலரும், ஒரோ ஒரிடத் தில் பற்பலரும் பலபடியாக ஆங்காங்கே தெருக்களில் கூடி நின்று, தம் கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி, வியப்பின் விளிம்பை எட்டியவர்கள் போலத் தத்தம் மூக்கின் நுனி யிலே சுட்டு விரலை வைத்துப் பழிச் சொற்களைக் கூறித் துாற்றுகின்றனர்; அப்பழிச் சொற்களை எம் தாய் கேட்டறிந்து அவை மெய்மொழிகளே எனக் கொண்டு கையில் சிறிய கோலொன்றினை ஏந்தி, அது சுழலும்படி வீசி அடிப்பவும் நான் துன்பமீதுாரப் பெற்றவளாயினேன்; ஆதலால் இந்தத் துன்பமெல்லாம் தீரும்படி உப்பங்கழி யருகின்கண் இருக்கும் சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் வாய்ந்த பிடரி மயிரினையுடைய விரைந்து செல்லும் குதிரை பூட்டிய நெடிய தேரைச் செலுத்தி, இரவு நடுயாமத்து நள்ளிருளில் வருகின்ற இயன்ற தேரையுடைய தனலவனோடு நீ செல்லுமாறு யான் உடன்பட்டு நின்றேன்; நீ எழுவாயாக! அங்ஙனம் அத்தலைவனோடு உடன் போக்கு மேற்கொண் டால் பேரொலியையுடைய இவ்வூர் யாது செய்ய இயலும்? வேண்டுமானால் அலர் நூற்றிக் கொண்டேயிருக்கலாம்’ என்று தோழி தலைவியிடம் கூறினாள்.