பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை 79°

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகின் பெண்டிர் அம்பல் துாற்றச் சிறுகோல் வலங்தனள் அன்னை: அலைப்ப, அலந்தனென் வாழி தோழி கானல் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செல்வயர்ந் திசினால் யானே அலர்சுமந்து ஒழிக இவ் வழுங்கல் ஊரே

-நற்றிணை : 149 இப்பாடலில் பெண்களின் ஒழுகலாறுகள் உள்ளபடியே சித்திரிக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

பிறிதெகரு நற்றினைப் பாடலில் நடத்தியதற்கு விளக்கம் நங்கையொருத்தியின் வாழ்வுவழிப் புலப்படுத்தப்பட் டிருக்கக் காணலாம்.

‘புதல்வனைப் பெற்ற நீலமலர் போலும் கண்களை யுடைய நங்கையொருத்தி தன் கொங்கையைக் கையாலே பிடித்துத் தன் புதல்வன் வாயில் வைப்ப, அக்குழவி அதன் கண்ணுள்ள பாலைக் குடிப்பது போலக் காந்தள் மலரின் பூங்கொத்தோடு பொருந்திய கொழுவிய மடலையுடைய வாழைப்பூவின் அந்த அருவிப்போலப் பெருகிவரும் இனிய நீரை, சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு பற்றிப் பருகும் மலைநாடனே! நட்பின் கண்ணோட்டமுடை யார்க்கு எதிரே சென்றிருந்து, ‘இதனை நீவிர் உண்பீராக என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும் நட்புடையாளரான அக்கண்ணோட்ட மிக்கார் அது நஞ்செனமுற்ற உணர்ந்த நிலையிலும், மறுக்கமாட்டாராய், அதனை உண்டு பின்னும் அவரோடு நட்பாடுவர்; நீ அத்தகைய நட்புடையவனாயிருந்தும், அழகிய சிலவாகிய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நீ உன் உள்ளத்தில் இன்பமாகக் கொள்ளவில்லை; அவ்வாறு இன்