பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை 81

வேண்டுவதுதானோ, இஃதொரு கொடுமை நிகழ்கிறதே’ என்று பெருங்கவலையுற்ற நிலையினை எடுத்துரைக்கக் காணலாம்.

புறந்தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம்பெறும் ஈரிதழ்ப் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்கஞ் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யா மையொடு இளிவுதலைத் தருமென உறுதி தூக்காத் துங்கி அறிவே சிறுதுகளிை விரையல் என்னும் ஆயிடை ஒளிறேங்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல விவது கொல்என் வருந்திய உடம்பே!

- நற்றிணை : 284

தலைவியின் காதற்சிறப்பினைப் பின்வரும் நற்றினைப் பாடல் வினக்கி நிற்கிறது.

தோளும் அழியும் நாளும் சென்றென ளிேடை அத்தம் நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தெளவின என்நீத்து அறிவு மயங்கிப் பிறிதா கின்றே நோயும் பெருகும் மாலையும் வந்தன்று யாங்கா குவென்கொல் யானே யீங்கோ சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவின் பிறப்புப்பிறி தாகுவது ஆயின் மறக்குவென் கொல்லென் காதல னெனவே

-நற்றிணை : 3:97

நெய்தல் திணையினைப் பாடவல்ல அம்மூவனார் இப்

பாலைத்தினைப் பாடலைப் பாடியுள்ளார். “தலைவன்

வருவதாகக் கூறிய பருவம் வந்து போனதால் என்தோளும்

LJ.-6