பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. குறுந்தொகை

எட்டுத் தொகை நூல்களுள் இரண்டாவதாக இடம் பெறுவது குறுந்தொகையாகும். இது நல்ல குறுந்தொகை என்று பாராட்டப் பெறுவதாகும். இது நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாவான நானுாறு பாடல்களைக் கொண்டதாகும். தொகை நூல்களில் முதலாவதாகத் தொகுக்கப் பெற்ற நூல் குறுந்தொகையே என்பதற்குத் தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் பின்வருமாறு காரணங் களைப் புலப்படுத்தியுள்ளாா.

குறுந்தெகையிலுள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர் பெற்ற புலவர்கள் அப்பெயராலேயே பிற நூல் களில் வழங்கப்பெறுவது போல அந்நூல்களிலுள்ள செய்யுட்பகுதி காானமாகப் பெயர் பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை. இதனாலும் முதலிற் குறுந்தொகை தொகுக்கப்பட்டதென்பது தெளி வாகும்,’ (குறுந்தொகை முகவுரை) மேலும் தொல் காப்பிய உரையாசிரியர்களாலும், சிலப்பதிகார உரையாசி ரியர்களாலும் எட்டுத்தொகை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்படும் செய்யுட்கள் மிகுதியாகக் குறுந்தொகை யிலிருந்துதான் என்பது தெரிய வருகிறது. ஏறத்தாழ 235 செய்யுட்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பெற்றிருக்கின்றன. பேராசிரியர் என்னும் தொல் பெரும் உரையாசிரியர் 380 செய்யுட்கு உரை எழுதினார்