பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 பாட்டும் தொகையும்

தலைவியின் உயிர் மிகவும் சிறியது; அவளுடைய காமம் மிகவும் பெரியது என்று புலப்படுத்த வருகின்ற தோழி, பலாமரத்தில் சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்கியது போல என்னும் உவமையைக் காட்டுகிறாள்.

“பாதுகாப்பு இலதாகித் தன்னை தாங்குதற்குரிய கொம்யும் சிறியதாகித் தானும் பெரியதாகி இருக்கும் பழம் கனிந்து கொம்பினின்றும் உகும். அன்றிப் பிறராற் கொள்ளவும் படும்; அதுபோலத் தன்னை வேற்று வரை வினின்றும் பாதுகாப்பார் இலனாகி உயிரும் சிறயவாகிய இவளிடத்துக் காமம் பின்னும் கனியின் இவர் உயிர் விடுதலும் நேரும்; அன்றிப் பிறர் வரைந்து கொள்ளவும் முயல்வாரென்று உவமையை விரித்துக் கொள்க. பழம் மிகக் கனிந்து வருவதன் பின் உரிய காலத்தே உரியார் கொள்வதைப்போல இவள் உயிர் இறப்பதற்கு உரிய பருவத்தே இவளுக்குரிமையாகிய நீ வரைந்து கொள் வாயாக என்பது குறிப்பு.’

மேற்கண்டபடிக் கீழ்க்கானும் கபிலரின் குறுந் தொகைப்பாடல் ஒன்றிற்கு டாக்டர் உ. வே. சாமி நாதையர் குறிப்புரை வரைந்துள்ளார். அவ்வரிய உயரிய பாடல் வருமாறு :

வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் காட செவ்வியை ஆகுமதி யாரஃது அறிந்திசி னோரே சாரல் சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.

-குறுந்தொகை : 18

சங்க இலக்கியத்தில் நிறையவும் நிறைவாகவும் பாடல் ளைப் பாடிய பெருமைக்குரியவர் கபிலர் ஆதல் போல வரலாற்றுக் குறிப்புகளைத் தம் பாடல்களில் அமைத்துப் பாடியவர் பரணர் ஆவர். அவர் பாடியுள்ள குறுந்