பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை 87

தொகைப் பாடலொன்றில் நன்னனைப் பற்றிய குறிப் பொன்று காணக்கிடக்கின்றது.

‘நீராடும் பொருட்டுச் சென்ற ஒள்ளிய நெற்றியை யுடைய பெண்ணொருத்தி அந்நீர் கொணர்ந்த பசுங் காயைத் தின்றதாகிய குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண் யானைகளோடு அவளது எடைக்கு எடை பொன் னாற் செய்த பாவையைக் கொடுப்பவும் கொள்ளானாகி அப்பெண்ணைக் கொலை செய்த நன்னனைப் போலத் தாய், ஒரு நாளில் நகுதலையுடைய முகத்தைக் கொண்ட விருந்தினனாகித் தலைவன் வந்தானாக, பகைவர் மாறிட்டுபபோரிடும் போர்க்களத்தின் அருகில் இருக்கும் ஊரினரைப் போல துயில் கொள்ளாதவளாயினாள் தலைவி. நீக்குதல் இல்லாத நரகத்தின் கண் பெண் கொலை புரிந்த நன்னன் சென்று சேர்ந்தது போல, இத்தாயும் சென்று துன்பத்தை அனுபவிப்பாளாக.” இவ்வாறு கூறினாள் தோழி.

மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற் கொன்பதிற் றொன்பது களிற்றொடு அவனிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல: வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை ஒருநாள், நகைமுக விருந்தினர் வந்தெனப் பகைமுக ஊரில் துஞ்சலோ இலளே.

-குறுந்தொகை : 292

தாம் பாடிய பாடலுள் அமைந்துள்ள சிறந்த தொடரால் பெயர் பெற்ற புலவர் பலரைக் குறுந்தொகை நூலிற்

«95гт 6 удтаuгт цо.

தெய்வத்தாலாகிய கூட்டத்தின் பின்பு தலைவி,

தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவான்

என்று ஐயுற்றபொழுது, அதனைக் குறிப்பாலுணர்ந்த