பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பாட்டும் தொகை யும்

தலைவன், ‘என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எத்தகைய ஒத்த உறவின் முறையினராவர்? என் தந்தை யும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்? இப் பொழுது கூடியிருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர் முன்பு எவ்வாறு அறிந்திருந்தோம்? இம் மூன்றும் இல்லை யாகவும். செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அம் மண்ணோடு கலந்து, அம்மண்ணின் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்று கலந்துவிட்டன.’

யாயும் ஞாயும் யாரா கியரோ

எங்தையும் நுங்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாங் கலந் தனவே.

-குறுந்தொகை : 40

இந்தப் பாடலைப் பாடிய புலவரின் பெயர் யாதோ அறியோம். இப்பாடலைப் பாடிய பின் அவர் செம்புலப் பெயல் நீரார்’ என்றே அழைக்கப்பெற்றார்.

தலைவன் தலைவி நடாத்தும் அன்பான இல்லற வாழ்க்கையினைக்கூடலூர்கிழார் என்னும் குறுந்தொகைப் புலவர் அழகுறப்பாடுகின்றார்.

தோழி முற்றிய தயிரைப்பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலினைத் துடைத்துக்கொண்ட ஆடையைத் துவைக்காமல் உலர்த்திக் கொண்டு குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மறைப்ப, தானே துழாவிச் சமைத்த இனிய புளிக் குழம்பைக் கணவன் இனிது என உண் பதனால் மனைவி யின் முகமானது நுண் ணிதாக மகிழ்ந்தது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழக்