பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை & 9

தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

-குறுந்தொகை : 167 உள்ளுறை உவமம், இறைச்சி ஆகிய பொருள்கள் குறுந்தொகைப் பாடல்களில் நிரம்ப இடம்பெற்றுள்ளன. வயலருகிலுள்ள மாமரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தைப் பொய்கையிலுள்ள வாளை மீன்கள் கவ்வி உண்னு தற்கு இடமாகிய ஊரையுடைய தலைவன், எம்முடைய வீட்டில் பெருமொழிகளைக் கூறிச்சென்று, தம்முடைய வீட்டில் ஆடியின் முன்னின்றார், தம் கையை யும் காலையும் தூக்கத்துாக்கும் அவ்வாறே பிரதிபலிக்கின்ற கண்ணாடியில் தோன்றுகின்ற பாவையைப் போலத் தன்னுடைய மனைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய் கிறான் எனக் காதற்பரத்தை குறிப்பிட்டாள்.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கது உம் ஊரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் துளக்கத் துக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும் தன்புதல்வன் தாய்க்கே.

-குறுந்தொகை : 8 இப்பாடலில் கழனி தலைவி உறையும் ஊராகவும், மாமரம் தலைவியாகவும், மாம்பழம் தலைவனாகவும் பழனம் பரத்தையர் சேரியாகவும், வாளைமீன் பரத்தை யாகவும் கொள்ள இப்பாடல் உள்ளுறை உவமத்தை உள்ளடக்கியதாயிற்று எனலாம்.

இறைச்சிப் பொருள் இடம்பெறும் ஒரு பாடல் வருமாறு:

கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி