பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பாட்டும் தொகையும்

கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும் சாரல் நாட நடுங்ாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

-குறுந்தொகை : 69

‘கரிய கண்களையும் தாவுதலையும் உடைய ஆண் குரங்கு இறந்ததாக, கைம்மைத் துன்பத்தைப் பொறுக்க மாட்டாத விருப்பத்தையுடைய பெண் குரங்கானது, மர மேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியைச்சுற்றத்தாரிடத்து அடைக்கலமாகஒப்படைத்து, ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே! நள்ளிரவில் வாராதே! வருந்துவோம்; நீ தீங்கின்றி வாழ்வாயாக!’

இப்பாடலில் தலைவனுக்கு ஏதேனும் ஏதம் உண் டானால் தலைவி, பெண் குரங்கு உச்சி மலை ஏறிக் கீழே பாய்ந்து உயிர்விட்டது போல இவளும் உயிரை மாய்த்துக் கொள்வாள் என்ற குறிப்பில் இறைச்சிப் பொருள் அடங்கியிருத்தல் காண்க.

குறுந்தொகைப் பாடல்களைப் பாடிய புலவர்கள் இருநூற்றைவர்; தொகுத்தவர் பூரிக்கோ.

இவ்வாறு குறுந்தொகைப் பாடல்கள் எளிமை, உவமை, உள்ளுறை, இறைச்சி, காதல் நுட்பம், கருத்துச் செறிவு, உணர்வோவியம். நுட்பமான இயற்கை வருணனை, வரலாற்றுக்குறிப்புகள் முதலான இன்னோ ரன்ன பல சிறப்புகள் அடங்கியிருக்கக் காணலாம். எட்டுத் தொகை நூல்களில் காதற் சிறப்பை நுட்பமாகப் புலப் படுத்தும் பாடல்கள் பலவற்றைக் கொண்டுள்ளது குறுந்தொகையே எனலாம். நல்ல குறுந்தொகை என்ற பாராட்டு இந்நூலிற்குப் பல்லாற்றானும் பொருத்த முடையதாகும்.