பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஐங்குறுநூறு

பாட்டும் தொகையும் சங்க நூல்கள் என வழங்கப் படும். பாட்டு எனப்படுவது பத்துப்பாட்டு, தொகை எனப்படுவது எட்டுத்தொகை. எட்டுத்தொகை நூல்கள் இவை இவை என ஒரு பழம்பாடல் குறிப்பிடுகிறது.

அப்பாடல் வருமாறு :

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கவியே அகம்புறமென்று

இத்திறத்த எட்டுத் தொகை.

எட்டுத்தொகை நூல்களுள் மூன்றாவதாக இடம் பெறுவது ஐங்குறு நூறு என்று இப் பாடல் வழிப் புலப் படுகின்றது. ஐங்குறு நூறு தன்னுடைய பெயருக்கேற்ப ஐந்நூறு பாடல்களும் சிதையாமல், அழியாமல் நமக்குக் கிடைத்துள்ளது நாம் பெற்ற பேறு எனலாம். அகப் பொருள் தழுவிய நூல்களுள் குறைந்த அடிகளைக் கொண்ட பாக்களைப் பெற்று அமைந்துள்ள நூல் ஐங்குறு

நூறு ஆகும்.

நூல் அமைப்பு

இந் நூல் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறடிப் பேரெல்லையையும் கொண்ட பாக்களை உடையத ாக