பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பாட்டும் தொகையும்

திகழ்கின்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்தினைப் பாகுபாட்டுடன் இந்நூல் விளங்குகிறது.

ஐங்குறு நூற்றின் பாடல்கள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற வரிசைப்படி அமைத் துள்ளன, ஒவ்வொரு நூற்றையும் பத்துப் பத்துப் பகுதி களாகப் பகுத்து, ஒவ்வொரு பத்திற்கும் தனித்தனித் தலைப்புகள் அமைத்து அளனர். பிற்காலத்தில் பத்துப் பாடல்களின் தொகுதியைப் பதிகம் என்றும், நூறு பாடல் களின் தொகுதியைச் சதகம் என்றும் வழங்கினார்கள். எட்டுத்தொகை நூல்களிலேயே பத்துப் பத்துப் பாடல் களைக் கொண்ட நூல் பதிற்றுப் பத்து எனும் பெயரிலே வழங்கப்படுகின்றது. அது புறப்பொருள் தழுவிய நூல். ஆனால், ஐங்குறு நூறு அகப்பொருள் தழுவி ஐந்நூறு பாடல்களைக் கொண்ட தொகை நூலாகத் திகழ்கின்றது. பத்துப் பத்துப் பாடல்களாக அமைந்துள்ள தலைப்பு, அவ்வப்பாடல்களில் காணப்படும் கருத்துச் செறிவைப் புலப்படுத்தி நிற்கும் அருந்தொடர்களைத் தாங்கி நிற்கின்றன.

நூல் சிறப்பு

பொருள் காரணமாக, சொல் காரணமாக ஒன்றிற் கொன்று தொடர்பு உடையனவாகப் புனையப்படும் செய்யுள் தொடர்நிலைச் செய்யுள் என்று சொல்லப் பெறும். ஐங்குறு நூறும் கலித்தொகையும் தொடர் நிலைச் செய்யுள் வகையைச் சார்ந்த நூல்கள் என்று சான்றோர் குறிப்பிடுவர். ஐங்குறு நூற்றுச் செய்யுள் அனைத்தும் அம்மை, அழகு எனும் வனப்புகளைக் கொண்டு புனையப்பட்ட செய்யுள் என்பர். மூன்று முதல் ஆறு அடிகள் வரை அமைந்துள்ள பாக்களில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனும் மூன்றினையும் தன்னகத்தே கொண்ட இலக்கிய நயத்தினை நயம்படப் புலப்படுத்தியுள்ள செய்யுள்கள் ஐங்குறு நூற்றின் தனிச் சிறப்பாகும்.