பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐங்குறுநூறு B 3

தொகுத்தோரும், தொகுப்பித்தோரும்

இவ் அழகு நூலைத் தொகுத்த ஆசிரியர் சங்கப் புலவ ராகிய புலத்துவை முற்றிய கூடலூர் கிழார் என்பர். தொகுப்பித்தோர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை எனும் சேர வேந்தன் என்று செப்புவர். கூட லூர் கிழார் சேரநாட்டைச் சேர்ந்த புலவர் என்பர் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதையர்.

ஐங்குறு நூற்றுப்புலவர் பெருமக்கள்

பழம்பாடல் ஒன்று ஐங்குறு நூற்றைப் பாடிய புலவர் பெருமக்கள் பெயரினைப் புலப்படுத்துகிறது.

மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன்; கருதும் குறிஞ்சி கபிலன்; கருதிய பாலை ஓதலங்தை; பனி முல்லை பேயனே நூலை ஒது ஐங்குறு நூறு.

-பழம் பாடல்

எனவே, மருதத் திணையினை ஓரம்போகியாரும் நெய்தல் திணையினை அம்மூவனாரும், குறிஞ்சித் திணை யினைக் கபிலரும், பாலைத் திணையினை ஒதலாந்தை யாரும், முல்லைத் திணையிணைப் பேயாரும் பாடியுள்ள னர் என்பது இப்பாடற் பகுதியில் இருந்து நமக்குப்புலனா கின்றது. இந் நூலினை ஐம்பெரும் பகுதிகளாகப் பிரித்துப் பகுதி ஒன்றிற்குப் பத்துப் பாடல் அடங்கிய பத்துப் பத்துப் பாடல்களை உட் பிரிவாகக் கொண்டு அமைத்து, ஒவ்வொரு தலைபிற்கும் முதல், கரு, உரிப்பொருள்களை இணைத்துப் பத்து என்று பெயரிட்டுத் தொகுத்திருக்கின்ற முறையை இந் நூலினைத் தொகுத்த கூடலூர் கிழார் ஒவ்வொரு திணையைப் பாடியபெருமக்களின் சிறந்த பாடல்களைத் தேர்ந்து தெளிந்து ஒரு சிறந்த நூலாக ஐங்குறு நூற்றினை உருவாக்கியுள்ளார் என்று