பக்கம்:பாட்டும் பயனும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தார் ஆற்றும் தமிழ்ப்பணி நாடறிந்த ஒன்ருகும். மதுரைக்குச் சிலநாள் வாழவந்த என்னையும் அப்பணிவழி செயலாற்றத் தூண்டினர். அவர் தம் அன்பாணையை ஏற்றுப் பத்துப் பாட்டினை ஏழு தலைப்புக்களில் எழு ஞாயிறு களில் பேச இசைந்தேன். அப்படியே பேசினேன். அப்பேச்சுக்களின் தொகுப்பே இந்நூல்.

  பேச்சு வரிசையின் தொடக்க விழாவிற்குக் கருமுத்து. தி. சுந்தரம் செட்டியார் அவர்கள், தலைமை தாங்கிப் பல நல்ல கருத்துக்களை வீசி அவற்றின் வழி என் பேச்சு வரிசையை அமைக்க வழி கோலினார்கள். இப்பேச்சு வரிசைவழி பத்துப் பாட்டு அனைத்தையும் ஆழ்ந்து எடுத்துக் காட்டிவிட்டேன் என்று சொல்ல முடியாது. என்னுல் இயன்றவரை ஓரளவு கொண்ட தலைப்புக்கு ஏற்பச் சிற்சில கருத்துக்களையே சொல்லி இருக்கிறேன்.
  பத்துப்பாட்டு தமிழ் இலக்கிய உலகிலேயே மிகச் சிறந்த தொகுப்பாகும். சங்க காலத்திலே வாழ்ந்த மேலான நல்ல ஒழுக்கமும் பண்பாடும் கொண்ட சிறந்த புலவர்கள் பாடியவை இவை. இவற்றை ஆராய்ந்து பல புலவர்கள் பலப்பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவர்தம் பணிகளுக்கிடையில் என்னுடையது மிகச் சிறியதாகும். இப்பாட்டுக்களைப் பயிலுங்கால்