பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டி நாட்டுத் திருப்பதிகள் எண்(டு) இறுத்தடைத்தான் ரானே.* |பொன்னன். இரணியன்; வாள் அரக்கன்-இராவணன்; கா-பாரிசாதசோலை; சிலை-வில்; கணைகடல்-ஒலிக்கும் கடல்; பொன்னன் ஈன்ற மகன்-பிரகலாதன்; நடவை-வழி; உகிர்-நகம்; வளை-சங்கு; புள்-பறவை(கருடன்); உடல் கீறி-உடம்பைப்பிளந்து; முதலொடுங்கொண்டு-வேருடன் பெயர்த்து எடுத்து, ! இப் பாடலில் இரணியவதம், இராவணவதம், நூற்று வரை மாய்த்தல், பாரிசாத சோலையைக் கொணர்தல், மருத மரத்தை இறுத்தல் போன்ற தீரச் செயல்களைப் புரிந்தவன் திருமோகூர் எம்பெருமானே என்று கூறி அநுபவிக்கின்றார் கவிஞர்; விபவாவதாரச் செயல்களை யெல்லாம் அர்ச்சாவதாரத்தில் ஏற்றி மகிழ்கின்றார். வைணவ தத்துவப்படி இரண்டும் ஒன்றுதானே. இப் பாடலை அதுபவித்துக் கொண்டிருக்கும் போழுதே இத் தலத்தைப்பற்றித் திவ்வியகவி அருளிய திருப்பாடல் நினைவிற்கு வருகின்றது. வாயால் மலர்க்கோதி வாவிதொறு மேயுமோ மேயாமல் அப்பால் விரையுமோ-மாயன் திருமோகூர் வாயின்று சேருமோ காளை வருமோகூர் வாயன்னம் வாழ்ந்து." (வாவி-தடாகம்; மாயன்-திருமால்; திருமோகூர்வாய்திருமோகூரினிடத்து) தலைவனைப் பிரிந்த தலைவி அவன்பால் அன்னத்தைத் ஆாது விடுத்து அதன் செயலில் ஐயுற்று நெஞ்சிற்குக் கூறியதாக அமைந்த இப்பாடல் நம் உள்ளத்தைக் தொடு கின்றது. திவ்விய கவியின் ஞானக் கண்ணுக்கு حسسسسسسسسسسسم 45. தனிப்பாடல் திரட்டு. முதற்பகுதி (கழகம்)-523 46. நூற்.திருப் அந்-46.