பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் புவிநூற் படத்தில் குறித்துள்ளார். இத்திருக்கோயிலில் இடைக்காலக் கல்வெட்டுகள் நிறைய உள்ளன. இத் திவ்விய தலத்தில் பழையனின் பலத்த கோட்டையும் இருந்ததாகச் சான்றுகள் உள்ளன. திருமோகூர் தென்பறம்பு நாட்டின் ஒரு பகுதியாகத் திகழ்ந்திருந்த தையும் அறிக்கின்றோம். 18-ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சியில் இத் திருக் கோயில் கோட்டையாகப் பயன்பட்ட செய்தியும் அறியக் கிடக்கின்றது. கோயில்குடி, திரும்பூர் என்றெல்லாம் வழங்கியிருப்பதையும் அறிகின்றோம். கர்நாடகப் போர் நடைப்பெற்ற காலத்தில் முகம்மது அலி ஹீரான் மோகூர்த் திருக்கோயிலை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து பொன்னும்,பொருளும் கொள்ளையடித்ததாகவும்கோயிலின் பாதுகாப்பாளர்களாகத் திகழ்ந்த கள்ளர் குலமக்கள் ஹிரானின் i. Poi...— to 63)6]T விரட்டியடித்து அவர்கள் கைப்பற்றிய பொன், பொருள், இறைவன் திருமேனி முதலியவற்றை மீட்டதாகவும் அறிகின்றோம். இச்செய்தி களையெல்லாம் அறிந்த மனநிறைவுடன் நம் இருப்பிடத் திற்குத் திரும்புகின்றோம்.