பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அணிந்துரை ஜஸ்டிஸ் பா. ச. கைலாசம், (உச்ச நீதிமன்றம் புதுடில்லி.) தண்ணார் தமிழளிக்கும் தண்பாட்டி நாட்டின் பதினெட்டு திவ்விய தேசங்களைத் தாம் சென்று தரிசித்ததோடு நில்லாமல் நம்மையும் தன்னோடு கூடவே தம் அருமையான எழுத்தாற்றலால் அழைத்துச் சென்று வைணவ தரிசனம் செய்துவைக்கின்றார் பேராசிரியர் க. சுப்புரெட்டியார். திருக்கோட்டியூரிலே தொடங்குகின்ற இவர் தம் பக்திப் பயணம் திருக்குறுங்குடியிலே போய் முடிவடைகின்றது. இத்தனைத் திருப்பதிகளையும் இவரோடு தரிசிக்கின்ற நாம் மறந்தும் புறந்தொழா மாந்தராய்' மாறி விடுகின்றோம். தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ்வோர்கள்’ நிறைந்த திருக்கோட்டியூரிலேயே நமக்கு எட்டெழுத்து உபதேசம் ஆகிவிடுகின்றது. 'புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்ற சரணாகதி தத்துவம் தொடர்கின்றது. சோராத காதல் பெருஞ் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் பாராது’ அவனுக்குப் பல்லாண்டு பாடும் பான்மையினை நினைத்து நெகிழ்கின்றோம். தான் அறப் பெய்யும் காளமேகத்தைத்' திருமாலிருஞ் சோலை மலையிலே 'அறு கால் வரி வண்டுகள் ஆயிரம் நாமம் சொல்லிச் சிறுகாலையிலே பாடும்’