பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. திருமாலிருஞ்சோலை வள்ளல் வைணவர்கள் எம்பெருமானைக் கருணாநிதி? என்றும் கருணைக் கடல் என்றும் போற்றி மகிழ் வார்கள். இத்தகைய எம்பெருமான் ஒரு காரணமும் பற்றாமல் ஆன்மாக்கள் மீது காட்டும் கருணையை ஆழ்வார் பெருமக்கள் தம் பாசுரங்களில் சால்லிச் சொல்லி அருபவித்து மகிழ்ந்துள்ளனர். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர் மிகவும் எளிதான உவமையால் தெளிவாக விளக்குவர். பொன்வணிகன் தான் வாங்கும் பொன்னை மாற்றுப் பார்ப்பதற்காக உரைகல்லிலே உரைப்பான். அந்த மாற்றுக்குக் கிட்டத்தட்டச் சரியாக இருக்கும் எனத் தான் கருதும் மச்சாணியையும் அக் கல்லில் முன் உரைத்ததன் அருகில் உரைப்பான். இரண்டு உரையையும் மெழுகில் ஒற்றி எடுத்து மாற்று களை ஒப்பிட்டுத் தான் வாங்கும் பொன்னின் மாற்றினை அறுதியிடுவான். இத்தகைய அவன் செயலால் நாளாக நாளாக சிறிது சிறிதாகப் பொன் மெழுகில் சேர்ந்து கொண்டே போகும். சுறுசுறுப்பாகப் பொன் வாணிகம் நடைபெற்றால் ஒராண்டில் மெழுகில் சேரும் பொன்னை விற்றே தன் மகள் ஒருத்தியின் திருமணத்தையே முடித்த பொன் வாணிகர்களும் உளர். ஒற்றி எடுக்கும் பொன் துகளே நாற்பது சவரன், ஐம்பது சவரன் என்று சேர்ந்து விடும். இங்ங்னமே எம்பெருமானும் ஆன்மாக் களின் பிறவிகள் தோறும் அவர்கள் அறியாது செய்யும் சிறு சிறு செயல்களையும் அறிந்து செய்யும் பெரிய