பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ்சோலை வள்ளல் 35 எம்பெருமானும் ஆழ்வார் மனத்துள் புகுவதற்குத் திருமா லிருஞ் சோலைமலை என்று நினையாது சொன்ன உக்தி மாத்திரமே அவருள் புகுவதற்குரிய சிறிய துவாரமாக அமைந்து விட்ட அதிசயத்தை நினைந்து போற்று கின்றோம். அழகர் கோயில் என வழங்கும் திருமாலிருஞ் சோலை மதுரைக்கு வடக்கே 12 கல் தொலையில் உள்ளது. இத்தலத் திற்கு மதுரையிலிருந்து காரில் செல்லலாம், பேருந்தில் செல்லலாம், குதிரை வண்டியிலும் செல்லலாம். பேருந்தில் செல்லும் நாம் முதலில் திருக்கோயிலுக்கு முன்னதாகவுள்ள ஒரு பெரிய சோலையில் இறங்குகின்றோம். புறச் சூழ்நிலை யும் மனநிலையும் ஒரு சேரப்பெற்ற நிலையில் ஆழ்வார் பாசுரங்கள் படலம் படலமாக நம் சிந்தையில் எழுகின்றன, ஆழ்வார்கள் காலத்திலிருந்த சூழ்நிலையை இன்றும் நின்று நிலவுவதைக் கண்டு அதிசயிக்கின்றோம்.இந்தச்சோலைக்கு வடக்கிலும் மேற்கிலும் நீண்டுயர்ந்த மலைச் சிகரங்கள் இருப்பதையும் சோலையும் மரங்கள் அடர்ந்து இருண்டு இருப்பதையும் காண்கின்றோம். இப்புறக் காட்சி உடனே நம்மை, "குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே.’’’ |குலம்-தொண்டக்குலத்துக்குத் தலையான, கோலம். அழகு; மா-பெரிய கொற்றம்-வெற்றி; நிலம்-மரம் முளைக்கப் பாங்கான நிலம்) என்ற பெரியாழ்வாரின் பாசுரப் பகுதியில் ஆழங்கால் படச் செய்து விடுகின்றது. இந்தச் சோலையின் நடுவில் தான் திருக்கோயில் திகழ்கின்றது. ஆகவே இது திருமாலி 5. பெரியாழ் திரு. 48.5