பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

많 பாண்டி நாட்டுத் திருப்பதிகள்

  • ஈட்டிய பல்பொருள்கள்

எம்பிரானுக்கு அடியுறைஎன்று ஒட்டரும்தண் சிலம்பா துடைமாலிருஞ் சோலையதே' (ஒட்டரும்- ஓடிவாரா நின்ற} பாசுரப் பகுதியை நினைக்கத் துரண்டுகின்றது. இவருடைய அருமைத் திருமகளும், 'சத்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழி யும் சிலம் பாறுஉடை மாலிருஞ் சோலை’’’ |சந்து-சந்தனக் கட்டை, கார்அகில்-அகிற்கட்டை, தடங்கள்-குளங்கள்; பொருது-அழித்து; இழியும்-பெருகும்.! என்று குறிப்பிடுவதையும் எண்ணி மகிழ்கின்றோம். விண்ணளவும் ஓங்கி உயர்ந்துள்ள சோலைகளில் மானினங் கள் மலையின் நீலப் பாறை வழிகளில் புகுந்து எங்கும் மேய்ந்து கொண்டிருக்கும் காட்சி நம் மனத்தைக் கவர் கின்றது." குறவர்கள் தம் கையிலுள்ள கவனில் வைத் தெறியும் மணிகளின் ஒளி மலையெங்கும் மிகுதியாகக் காணப்பெறுகின்றது.' இத்தகைய ஆழ்வார் கூறும் காட்சிகளில் நம்மனம் ஈடுபட்டுத் திளைக்கும்பொழுது நம்மாழ்வார் திருவாய் மொழியின், 'வருமழை தவழும் மாலிருஞ் சோலை என்ற அடியில் நம் மனம் ஆழங்கால் படுகின்றது. இங்கு 'மழை தவழும் என்ற அடைமொழியே போதுமாயிருக்க, 21. ഒു. 9 8:6 24. பெரியாழ் திரு. 4.3:9 25. நாச். திரு. 9:10 26. பெரி. திரு. 9.8:7 27. பெரி. திரு. 9.8:3 28. திருவாய் 2.10:4

  • 38