பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ் சோலை வள்ளல் 99. வரு’ என்று மேலும் ஒர் அடைகொடுத்திருக்கும் நயத்தை நம் பிள்ளை காட்டுவதில் நம் மனம் ஈடுபடுகின்றது. 'ஊருக்கு இரண்டாயிற்று மழை, நின்ற இடத்தில் நின்று வர்ஷிப்பதோரு மேகமும்; போவதும் வருவதுமாயிருப்ப தொரு மேகமும்' என்ற ஈட்டு ரீ ஸுக்தியைக் கண்டு மகிழ்க மேகங்கள் மலைகளின் பெரிய கொடு முடிவுகளில் இளைப்பாறி இளைப்பாறி மீண்டும் செல்கின்றன வாதலின் மேழை தவழும்' என்று கூறுகின்றார் போலும். சித்தும் அசித்தும் எம்பெருமானின் திருமேனியாக இருப்பதாகக் கருதுவது வைணவ சித்தாந்தம். ஆகவே, எம்பெருமானின் இருப்பிடமாகிய அசித்தைத் தொழுவதும் எம்பெருமானின் திருமேனியைத் தொழுவதோடொக்கும். இது கருதியே நம்மாழ்வாரும், கமாலிருஞ்சோலை பதியது ஏத்தி எழுவது பயனே • ? స్త్ర என்றும், சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே.”* என்றும் கூறியுள்ளதை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். இந்த எண்ணத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது மலையின் மீது ஏறிப் பார்க்க வேண்டுமென்று நம் மனம் உந்து கின்றது. சற்றுக் காலையிலேயே வந்து விட்டதால் வெயில் வருவதற்கு முன்னர் மலையேறத் திட்டமிடுகின்றோம். சோலையின் நடுவில் இறங்கியிருக்கும் நாம் கோயிலின் பெருவாயில் எப்போதும் அடைத்தே வைத்திருப்பதைக் காண்கின்றோம். அங்குத்தான் திருக்கோயிவின் காவற். 29. திருவாய் 2.10.2 30, டிை 3.3:8