பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ் சோலை வள்ளல் 103. படுகின்றது. இந்தத்தீர்த்தத்தில் அயச்சத்தும்தாமிரச்சத்தும் இருப்பதாகவும் இதில் நீராடுபவர்கட்குத் தீராதநோய்களெல் லாம் தீர்வதாகவும் சொல்லுகின்றனர்.இந்தத்தீர்த்தம்.தெற்கு நோக்கிப் பாய்ந்து வருங்கால் சிலம்பாறு’ என்றபெயருடன் இரண்டாவது தீர்த்தமாகின்றது. திருமால் உலகளந்த காலத்தில் திரிவிக்கிரமனின் திருவடி சத்தியலோகத்தை எட்டினபொழுது நான்முகன் தன் கைக் கமண்டல திர்த்தத்தால் கழுவி விளக்கியதாகவும், அந்த எம்பெருமா ளிைன் காற் சிலம்பினின்று தோன்றியதனால் சிலம்பாறு’ என்று பெயர் பெற்றதாகவும் புராண வரலாறு. நூபுரி கங்கை என்ற வடமொழிப் பெயரும் இது பற்றியதே. வட மொழியில் சிலம்பு நூபுரம் என்று வழங்கப்பெறும். இதனையே திருமங்கையாழ்வார்,

  • சிலம்பி லாறுடைய

திருமாலிருஞ் சோலை' என்று தம்முடைய பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்விடத்தில் திருக்கண்ணபுரம் சுவாமி என்ற ஒரு வைணவப் பெரியார் சிலம்பாறு’ என்பதற்கு சுவையாகப் பணித்த விளக்கமும் நம் நினைவிற்கு வரு கின்றது. சிலம்பொலி ஞெகிழி குன்றாம் என்ற சூளா மணி நிகண்டின்படி சிலம்பு’ என்ற சொல் குன்றினை யும் குறிக்கும். கின்னர மகளிர் திருமாலிருஞ்சோலைத் தாழ்வரையில் வந்து தங்கி நம்மாழ்வாரது திருவாய் மொழிப் பாசுரங்களை இசையுடன் ஒதினதாகவும், :மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ என்று கூவின ஆழ்வாரது பாசுரங்களைச் செவிமடுத்த குன்றும் உருகிப் பெருகா நினறது என்றும், அங்ங்னம் குன்றே உருகிப் பெருகினமையால் அது சிலம்பாறு’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவாராம். பெரியாழ்வாரின், אגאלאצאנושא: 31. பெரி. திரு 9,9:9