பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1秘4 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் என்று தொடங்கும் பாசுரம் முதல் பத்துப் பாசுரங்களை பும் திருகடைக்காப்புப் பாசுரத்தையும் சேவித்துக் கொண்டே இறங்கி வருகின்றோம். வருங்கால் பாசுரங் களின் சில சொற்றொடர்களில் ஆழங்கால்படுகின்றோம். மேறியொடு பினை சேர் மாலிருஞ்சோலை,” திருமலைக்கு மறியோடு பினை சேர்’ என்ற அடை மொழி கொடுத்ததற்கு ஒர் உட்கருத்து உண்டு. அந்த மலையில் குட்டியும் தாயும் பிரியாதிருத்தல் போல் நாமும் தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில் ஈசனைப் பிரியா திருத்தல் நன்று என்று தொனிப் பொருள் காட்டியுள்ளதை அருபவிக்கின்றோம். வலஞ்செய்யும் ஆய மாயவன்கோயில்," ஆயன் + மாயவன் - ஆய மாயவன். வலம் செய்யும்’ என்ற அடைமொழியால் எம்பெருமான் தன்னையும் கொடுத்து தன்னை அநுபவிக்கைக்கீடான வலிமையையும் கொடுப் பவன் என்பது உணரப்பெறும். இதற்குவேறு வகையாகவும் பொருள் கூறுவர்: 'திருச்சித் ரகூட பரிஸ்ரத்திலே பிராட்டியும்கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலவினாற் போல, பிராட்டியைப் பிடித்துக் கொண்டு அழகர் ஆதரத் தோடே லஞ்சரிக்கிற தேசம்’ என்பது நம் பிள்ளை ஈடு. *அழகர் பிராட்டிமாரோடே கூடவலஞ் செய்கிற" என்பர் பெரிய வாச்சான் பிள்ளை. இப்பொருளில், ஆய மாயவன் வலஞ் செய்யும் கோயில் என்று கொண்டுகூட்ட வேண்டும். மழக்களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை": இதில் மேழக்களிற்றினம் சேர்’ என்ற விடத்து ஒரு நயத்தைக் காட்டுவர் நம் பிள்ளை; லட்சனோபேதமாயிருப்பதொரு ஆனை நின்ற விடத்தே ஆயிரம் ஆனைகள் வந்து சேரா நிற்கும். அங்கு நிற்கிறதோ சோலை மழகளிறு” என்ப 38. திருவாய் 2.10.6 39. டிை 2.10:8 40, 6ു. 2.10:g -