பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ் சோலை வள்ளல் i{}{}

இவற்றை எம்பெருமான் திருவுள்ளம் பற்றுவானா?” என்கின்றாள். - இப்பாசுரத்தைபற்றி ஒர் இதிகாசம் உண்டு. எம் பெருமானார் நாச்சியார் திருமொழி காலட்சேபம் நடத்தும் பொழுது இப்பாகரம் அளவில் வருங்கால் ஆண்டாளுடைய எண்ணம் வாய்ச் சொல்லளவில் சென்றதே யொழிய, செயற்படவில்லை. அதனை நாம் தலைக் கட்டவேண்டும் என்று கருதி, அப்பொழுதே புறப்பட்டுத் திருமாலிருஞ்சோலை மலைக்கு எழுந்தருளி நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும் அழகருக்கு அமுது செய்வித் தருளி னார் என்றும், அதன்பின்னர் அப்படியே சீவில்லி புத்துார் ஏற எழுந்தருளி ஆண்டாளை அடிவணங்கி நின்றார் என்றும், அப்பிராட்டியும் தன் நினைவறிந்து இவர் நிறைவேற்றிய செயலுக்கு மனமுவந்து நம் அண்ணரே!” என்று சொல்லி அர்ச்சாவதார சமாதி கடந்து தழுவிக் கொண்டாள் என்றும் பெரியோர் பணிக்கும் வரலாற்றையும் எண்ணி மகிழ்கின்றோம். இன்னொரு இதிகாசம்: நஞ்சீயர் சந்நிதியில் நம் பிள்ளை, ஒரு பூர்ண குடும்பத்துக்கும் அதிகப்படியான வற்றை விரும்பாத எம்பெருமான் விஷயத்தில் நூறு தடா நிறைந்த வ்ெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்கார அடிசிலும் சமர்பிக்கவேண்டுவேமோ?’ என்று வினவ, அதற்குச் சீயர் திருவாய்ப் பாடியின் செல்வத் திற்கு இஃதெல்லாம் கூடினாலும் ஒரு பூர்ண கும்பத் துக்குப் போராது காணும்’ என்று அருளிச் செய்தாராம். இதனையும் எண்ணிப் பரவசப் படுகின்றோம். இத் தலத்து உற்சவ மூர்த்தியான ஆண்டாள் மற்றத் திருத்தலங்களிலிருப்பது போலல்லாது இருந்த திருக் கோலத்தில் காணப்பெறுகின்றார். அழகர் தமது திருமணத் திருநாளன்று பெரிய பிராட்டியார், பூமிப் பிராட்டியார், கல்யாண சுந்தரவல்லி நாச்சியார், ஆண்டாள் என்ற