பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற எம்பெருமானின் ஐந்து நிலைகனை-பக்தி, பிரபத்தி வழிகளை பிராரத்தம், சஞ்சிதம், ஆகாமியம் ஆகிய வினைகளின் தொகுதியை - எம்பெருமனின் திருமேனியாக வைணவ சித்தாந்தம் பேசும் சித்து அசித்துபற்றி-சகல வேத சாரத்தைத் தன் ஒன்ளேயே அடக்கி வைத்துள்ள முதல் பதமாகிய பிரணவம் பற்றி மிகவும் எளிதிலே புரிந்து கொள்ளும் வகையில் மிக அழகாக விளக்கியிருக்கும் நேர்த்தி உள்ளத்தைக் கவர்கிறது. எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத அழகிய தீந்தமிழ் உள்ளத்தின் ஆழத்திலே ஒரு குளுமையை ஏற்படுத்துகிறது. வைண நூல்களை எவ்வளவு ஆழமாகப் படித்திருக்கிறார் பேராசிரியர் சுப்புசெட்டி சர் என்பது புரிகின்றது. இது போல இன்னும் பல நூல்களை எழுதி மொழிக்கும் முதல்வனுக்கும் தொண்டாற்றிய வண்ணமிருக்க எம்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன். -ஐஸ்டிஸ் பா. ச. கைலாசம்