பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ் சோலை வள்ளல் 盖鲁舒 முருகன் அன்று கோயில் கொண்டிருந்தான். அதுவே ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலைமலை என்றும்அறிகின்றோம். அண்மையில் அங்கு முருகனுக்கு ஒரு திருக்கோயில் எழுப்பித்துள்ளனர் முருகனடியார் கள். எப்படியோ இந்த மலை பண்டைக்காலம் முதல் இன்று வரை திருமாலுக்கும் அவன் யருகன் முருகனுக்கும் உரிய மலையாக வந்திருக்கின்றது. அதனாலேயே கந்தபுராணம் இம்மலையை முத்தி தருபேரழகர் திருமலை’ என்று சிறப்பித்துள்ளது என்பதனையும் அறிந்து மகிழ் கின்றோம். மலையின் மேலிருந்த படியே பெரியாழ்வாரின் இரண்டு திருமொழிகளையும், திருமங்கையாழ்வாரின் ஒரு திருமொழியையும்" வாய் வெருவப் பாடிப்பாடிப் பாசுரத் தின் சுவையிலும் நாம் நேரில் காணும் காட்சியிலும் ஆழங்கால்பட்டு ஆநந்தம் அடைகின்றோம். தீர்த்தங்களைச் சேவித்த பிறகு தீர்த்தனாகிய எம் பெருமானைச் சேவிப்பதற்காகக் கீழே இறங்குகின்றோம். இறங்கும் போது. . கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர்ஒளி மாபோன் மருவிய கோயில் வளர்.இளம் பொழில்சூழ் மர்லிருஞ் சோலை தளர்வு இலர் ஆகிச் சார்வது சதிரே...' |கிளர்-மேன்மேலும் கொழுந்து விடுகின்ற; மருவியதங்கியுள்ள; தளர்வு-தளர்ச்சி; சார்வது-அடைவது; சதிர்சாதுர்யம்} 34. இது விவாதத்திற்குரியது. டாக்டர் மா. இராச மாணிக்கனார் எழுதியுள்ள பத்துபாட்டு ஆராய்ச்சி (சென்னைப் பல்கலைக்கழகம்) என்ற நூலில் திருமுரு காற்றுப்படை பற்றிய ஆய்வுக் கட்டுரையைக் காண்க. 35. பெரியாழ். திரு. 4. 2, 4. 3. 36. பெரிய, திரு 9.8 37. திருவாய் 2.10:1