பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இலக்குமி, வராகர் முதலிய கண்கவர் கற்சிலைகளைக் கண்டு களிக்கின்றோம். கலையுணர்ச்சியுள்ளவர்கள் இவற்றைக் கண்டு களிப்பதற்கென்றே இத்திருக்கோயிலுக்கு திருத்தலப் பயணம் வந்தாலும் வரலாம். திருக்கோயிலின் பிரதான வாயில் தொண்டை மான் கோபுர வாயில் என்பது. அதனைக் கடந்துதான் திருக் கோயிலின் உட்பிராகாரங்கட்குச் செல்ல வேண்டும். திருக்கோயில் மிகப் பெரிய கோயிலே. இரண்டு மூன்று பிராகாரங்களைக் கடந்துதான் கருவறைக்கு வந்து சேர வேண்டும். வழியில் சுந்தரபாண்டியன் மண்டபம், ஆரியன் மண்டபம், முனைதரையன் மண்டபம் முதலியவற்றைக் காண்கிறோம். கிழக்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பெரிய பிராட்டியார். பூமிப் பிராட்டியார் இருபுறம் நிற்கச் சேவை சாதிக்கும் மூலவர் பரமசாமியைக் காண்கின்றோம். இ வ. ரே திருமாலிருஞ்சோலை எம்பெருமான். இவருடை திருமேனி யின் அழகில் நம் உள்ளத்தைப் பறிகொடுகின்றோம். நம்மையும் அறியாது. 'முடிச்சோதி யாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி கிேன்ற தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் கின்பைம்பொன் கடிசோதி கலந்ததுவோ திருமாலே! கட்டுரையே. : (கடி-இடுப்பு (வடசொல்)) என்ற நம்மாழ்வாரின் பாசுரம் மிடற்றொலியாக வெளிப் படுகின்றது. நின் திருமுக மண்டலத்தின் ஒளி மேல் முகமாகக் கிளர்ந்து திருவபிடேகச் சோதியாய 45. திருவாய் 3.1:1