பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it}8 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் திருக்கடைக்காப்பு நீக்குவதுமான வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. இத்திருத்தலத்தின் தாயார் கல்யாண சுந்தரவல்லி காச்சியார். இவருடைய சந்நிதி கோயிலின் தென்புறம் உள்ளது. அங்குச் சென்று அவருடைய திருவருளையும் பெறுகின்றோம் இவரைத் தனிக்கோயில் தாயார்? என்றும் வழங்குகின்றனர். சுந்தரவல்லி நாச்சியார் தம் திருப் பெயருக்கேற்ப மிகப் பேரழகுடன் திகழ்கின்றார். திருக் கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் ஆண்டாள் சந்நிதி உள்ளது. அங்கும் சென்று அவருடைய பேரருளைப் பெறுகின்றோம் அவர் சந்நிதியில் சிந்துணரப்பொடி' என்ற நாச்சியார் திருமொழியை ஒதி உளங்கரை கின்றோம். அடியிற் காணும் பாசுரத்தை இருமுறை ஒதுகின்றோம். காறு கறும்பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்குநான் நூறு தடாவில் வெண்ணெய்வாய் கேர்ந்து பராவிவைத்தேன், நூறு தடாகி றைந்த அக்கார வடிசில் சொன்னேன் ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ.' (நாறும்-மணம்கமமும்; வாய்நேர்ந்து -வாயாலே சொல்லி, பராவி-சமர்ப்பித்து; சொன்னேன்-வாயால் சொன்னேன்.) இதில் ஆண்டாள் எம்பிரானுக்கு அடியேன் நூறு தடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடாநிறைந்த அக்கார அடிசிலும் வாயால் சொல்லி சமர்ப்பிக்கின்றேன். 46. நாச். திரு 9 47. ഒു 9.6