பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i is] பாண்டி நாட்டுத் திருப்பதிகள் நான்கு தேவிமார்களுடனும் எழுந்தருளுகின்றார் என்ற செய்தியையும் அறிகின்றோம். அடுத்து, சுதர்சன சக்கரர், யோக நரசிம்மர் ஆகியோரின் சந்நிதிகட்குச் சென்று அவர்களையும் சேவிக்கின்றோம். இறுதியாகக் கொடிமரத்தருகில் வந்து எம்பெரு மானிடம் விடைபெறுகின்றோம். திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. பேணிந்தேன் திருமாலைப் பாமாலை தாளில் அணிந்தேன் அருள்தஞ்ச மாகத்-துணிந்தேன் திருமா லிருஞ்சோலை சேர்ந்தேன் எனக்கு வருமால் இருஞ்சோதி sur br3"48 [தஞ்சம்-பற்றுக்கோடு, இருஞ்சோதிவான்-பரமபதம்) என்ற பாசுரத்தை மிடற்றொலியுடன் சேவித்து எம்பெரு மானை விட்டுப் பிரிகின்றோம். வருங்கால் இப் பாசுரம் பூதத் தாழ்வாரின், 'பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய்-துணிந்தேன் புரிந்தேத்தி உன்னை புகடலிடம்பார்த் தாங்கே இருந்தேத்தி வாழும் இனிது.”* (கமலம்-தாமரை, புரிந்து-விரும்பி; ஏத்தி-துதித்து; புகல் இடம்-புகவேண்டிய இடம், பரமபதம்.) 48, நூற். திருப். அந். o 41 49. இரண். திருவத். 65