பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டி நாட்டுத் திருப்பதிகள் م2 - 1 அன்பர் ஒருவர் இயற்றியுள்ள அழகர் கலம்பகமும் குறிப் பிடத்தக்கவை. இரண்டிலும் பக்திச் சுவை தனி சொட்டும் பல சுவையான பாடல்கள் உள்ளன. காள மேகப் புலவர் அழகர் மீது பாடியுள்ள ஒரு பாடல் நிந் தாஸ்துதிபோல் அமைந்துள்ளது.

மீனமுகம் ஆமை முகம் மேதினியெ லால் இடங்த ஏனமுகம் சிங்கமுகம் என்னாமல்-ஞானப் பழகர் என்றும் சோலைமலைப் பண்பரென்றும் உம்மை அழகர் என்றும் பேரிட்டார் யார்?'

(மேதினி-நிலஉலகம்; இடந்த தோண்டிய, ஏனம்பன்றி.) என்ற பாடல் படித்து சுவைக்கத் தக்கது. அழகர்மலை எம்பெருமான் சுந்தரராசர் செல்வச் சிறப்புடைய சீமான். அரங்கத்து அரவணையானின் செல்வ நிலை எவ்வளவு என்பது நமக்கு ஒரளவு தெரியும். அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்கும் காணாது? என்பது பழமொழி என்றால் அதிகம் சொல்வானேன்? சித்திரைத் திருநாளன்று அவர் அணிகள் எல்லாம் திகழ மதுரைக்கு எழுந்தருளியிருக்கும் கோலாகலத் தைக் கொண்டே இது தெளிவாகும். சித்திரைப் பெளர்ணமியன்று மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திரு மணம் நடைப்பெறுகின்றது மதுரையில். அதில் கலந்து கொள்ள சீர்வரிசைகளுடன் கிளம்புகின்றார் சுந்தர ராசர் என்ற அழகர். அவர் வைகைக்கரை வந்து சேரும் முன்பு அவரை மக்கள் எதிர்கொண்டு அழைக் கின்றனர். வழியிலுள்ள மண்டபங்களில் மக்கள் தரும் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுகின்றார். சித்திரா பெளர்ணமியன்து வைகையாற்றில் இறங்கி வண்டியூர் வரைசென்று தேனூர் மண்டபத்தில் தங்கித் திரும்பு 51. தனிப்பாடல் திரட்டு (முதல்பகுதி)-500 (கழகம்}