பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாலிருஞ்சோலை வள்ளல் 113 கின்றார். திரும்பும்போது நடைபெறும் பூப்பல்லக்கு சேவை கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அழகரின் இந்த உலாவைப் பற்றி மக்களிடையே வழங்கும் கதை கவாரஸ்யமானது. அழகர் தம் தங்கை யின் திருமணத்திற்குச் சீர்வரிசைகளுடன் புறப்பட்டதாக வும், அப்படி வருவதில் தாமதம் ஏற்பட்டுக் குறித்த காலத் தில் வந்து சேர முடியவில்லை என்றும், ஆதலால் முகூர்த்தம் அவர் வரும் முன்பே நடந்து விட்டதாகவும் அதனால் சீற்றங் கொண்டு மதுரை நகர் வராமல் வைகை வழியாக வண்டியூர் செல்வதாகவும் சொல்வர். இக்கூற்றில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அழகர் மீனாட்சி திருமணத்திற்கு வந்திருந்து தங்கையைத் தாரை வார்த்துக் கொடுத்த வரலாற்றுக்குச் சோமசுந்தரர் திருக்கோயி லுள்ள சிற்பம் சான்று பகன்று நிற்கின்றது. அப்படியிருக்க மக்கள் இப்படிக் கயிறு விடுவது என்ன காரணத்திற்கோ? இப்படியெல்லாம் கடவுளர் வாழ்விலும் பிணக்குகளை ஏற்படுத்தி அநுபவிப்பதில் பொதுமக்கள் உண்மை யிலேயே ஒரு பேரின் பத்தைக் காண்கின்றனர். கடவுளர்தம் வாழ்க்கையையும் தம் வாழ்க்கையைப் போலவே அமைத்து மகிழ்கின்றனர். திருமாலிருஞ்சோலைமலை ஆழ்வார் காலத்திற்கு முந்திய பழம் பெருமை உடையது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பரி பாடலில், அரிதாகப் பெறற்குரிய துறக்கம் எளிதாகப் பெறத் துணைப்புரியவல்லது இம்மலை என்னும் கருத்து. அரிதிற்பெறு பிறக்க மாலிருங் குன்றம் எளிதில் பெறலுரிமை' - என்ற அடிகளால் குறிப்பிடப் பெற்றுள்ளது. இந்தப் பாடலில் இளம்பெரு வழுதியார் என்ற நல்லிசைப் 52. பரிபாடல்-அடி 17, 18: தி -8