பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வில்லிபுத்துனர் வேயர் பயந்த விளக்கு" இந்த உலகில் ஞான பக்தி வைராக்கியங்களுடன் திகழ்ந்து முக்தியடைந்த பெரியோர்கள் பலர். அவர்களுள் உயர்நிலையில் நின்று புகழ்பெற்றவர்கள் இருடிகளும் (ரிஷிகள்) ஆழ்வார்களும் என்று பெரியோர்கள் பணிப்பர். இவர்களுள்ளும் இறையன் பில் ஒருவரோடொருவரிடையே ஏற்றத்தாழ்வு உண்டு என்ற பெற்றியை உரை மன்னன் பெரியவாச்சான் பிள்ளை எடுத்துக்காட்டி மிகத் தெளிவாக விளக்குவர். இருடிகளையும் ஆழ்வார்களையும் ஒப்ப நோக்குங்கால் இருடிகளின் பக்தி அணுவளவாகவும் ஆழ்வார்களின் பக்தி மலையளவிலும் காணப்பெறும். அங்ங்னமே மற்றைய ஆழ்வார்களின் பக்தியையும் பெரியாழ்வாரின் பக்தியையும் ஒப்பிட்டு நோக்கினால் மற்றையோர் பக்தி அணுவளவாகவும் பெரியாழ்வாரின் பக்தி மலையளவாகவும் தோற்றம் அளிக்கும். பெரியாழ் வார் பக்தியையும் அவரது அருமை மகள் ஆண்டாள் பக்தியையும் சீர்தூக்கினால், பெரியாழ்வார் பக்தி அணு வளவிலும், ஆண்டாள் பக்தி மலையளவிலும் தோன்றா .திற்கும். பெரிய வாச்சான் பிள்ளையின் இந்த விளக்கத் 宗 வேயர்-பார்ப்பனர் குலத்தில் ஒரு பிரிவினர்; இபரியாழ்வார் இப்பிரிவினைச் சேர்ந்தவர். . . . . 1. பெரி. திரு. 1.6:11:2.5:10 நாச்.திரு. 2:10,6:1;