பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லிபுத்துனர் வேயர் பயந் த விளக்கு 117 தைச் சிந்தித்த நிலையில் மதுரையிலிருந்து சீவில்லி புத்துாருக்குப் புறப்படச் சித்தமாகின்றோம். பெரியாழ்வாரும் ஆண்டாளும் பிறந்த ஊர் சீவில்லிபுத் துனர். இந்த ஊர் விருதுநகர்-தென்காசி இருப்பூர்தி வழியில் உள்ளது. இவ்வூருக்கு இருப்பூர்தி நிலையம் உள்ளது. ஆகவே, இருப்பூர்தி பில் செல்ல விரும்புவோர் எளிதாக அவ்வூரைச் சென்று அடையலாம் மதுரை யிலிருந்து இந்த ஊருக்கு அடிக்கடிப் பேருந்து வசதியும் உண்டு பேருந்தில் செல்லுபவர்கள் சீவில்லிபுத் தூரை விரைவில் சென்று அடையலாம். இந்தத் திருத்தலத்திற்கு நான்கு பக்கங்களிலிருந்தும் நல்ல சாலை வசதிகளும் பேருந்து வசதிகளும் நன்முறையில் ஏற்படுத்தப் பெற்றுள்ளன. மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் தங்கி யிருக்கும் நாம் அதிகாலையில் எழுந்து தீர்த்தமாடி நல்லாடை புனைந்து கொண்டு பேருந்து மூலம் சீவில்லி புத்துருக்குப் புறப்படுகின்றோம். பேருந்தில் சென்று கொண்டிருக்கும் பொழுதே வில்லிபுத்துர்’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்த காரணத்தைச் சிந்திக்கின்றோம். நம் சித்தனை புரான நோக்கில் பாய்ந்து செல்லுகின்றது. இரணியாட்சன் என்ற அசுரன் பூமிக்குப் பெரும் பாரமாய் இருந்து கொண்டு சாதுசனங்களை நலியும் பான்மையனாய் அவர்கட்கு எத்தனையோ கொடுமைகளை யும் தீச் செயல்களையும் இழைத்து வந்தான் என்பதை நாம் அறிவோம். அப்படிபட்ட அசுரனை எம்பெருமான் வராக வடிவங்கொண்டு வதைத்தான் என்று புராணம் கூறுகின்றது. அந்தத் தலந்தான் வராக கேr நிரம் என்று வடமொழிப்பெயரால் வழங்கப்பெறுவதாக வில்லிபுத்துார்த் தலப்புராணம் கூறுகின்றது. வில்லி புத்துர்ப் பகுதி ஒரு காலத்தில் செண்பகக் காடாக மண்டிக் கிடந்தது. இப்பகுதியை மல்லி என்ற வேடப் பெண்ணரசி ஒருத்தி ஆண்டு வந்தாள். என்வே,